அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிரபலமான நடிகை தமன்னா. ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமீப காலங்களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருந்தாலும் ஹிந்தியில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் தென்னிந்தியப் படம் ஒன்றில் நடிக்கும் போது நடிகர் ஒருவருடன் தொந்தரவான நிகழ்வு ஒன்று நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார். அந்த நடிகரின் நடத்தை தனக்கு சங்கடமாக இருந்ததாகவும், அதன்பின் இப்படி நடந்தால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்று தெரிவித்ததாகவும், அதன்பின் அந்த நடிகர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
பொதுவாக, தென்னிந்திய நடிகர் என்று குறிப்பிடும் போது அவர் தெலுங்கு நடிகரா, தமிழ் நடிகரா என குழப்பம் வரும். இருந்தாலும் பாலிவுட் நடிகைகள் தெலுங்கு அல்லது தமிழ் பற்றி குறிப்பிடும் போது தென்னிந்திய படம் என்றே சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
தமன்னா கடந்த சில வருடங்களாக விஜய் வர்மா என்ற நடிகரைக் காதலித்து வந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.