தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் புதுமுக ஆதித்யா மாதவன் நடிக்கும் கிரைம் திரில்லர் படம் ‛அதர்ஸ்'. இந்த படம் மருத்துவதுறை பின்னணியில் நடக்கிறது. கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக ஹீரோ ஆதித்யா மாதவனும், 96 பட புகழ் கவுரி கிஷன் டாக்டராகவும் வருகிறார்கள். இவர்களை தவிர அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெரடி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பார்வையை வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் வெளியிட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
மருத்துவத்துறை பின்னிணியில் அதில் நடக்கும் முறைகேடுகள், கிரைம் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும் அதர்ஸ், அதிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்திடன் போஸ்டரில் சிசு இடம் பெற்று இருப்பதால் கர்ப்பம், குழந்தை, பிரசவம் பின்னணியில் இந்த கதை உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.