தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஒரு பெரிய படம் வந்தால், அதற்கு முன்னும், பின்னும் குறிப்பிடும் அளவிலான படங்கள் எதுவும் வராது. இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் கடந்த வாரம் 'கூலி' வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பு 10 படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்கள் ஒரு சில நாட்கள் தாக்குப் பிடித்து ஓடியதே பெரும் விஷயமாக இருந்தது.
கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களை 'கூலி' படம் ஆக்கிரமித்தது. இந்த வாரமும் அது தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாகிறது. “இந்திரா, சினிமா பேய்' ஆகிய படங்களும், மறுவெளியீடாக 'கேப்டன் பிரபாகரன்' படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 27ம் தேதி 'அடங்காதே, ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.