மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
மலையாளத்தில் குறிப்பிடத்தக்க வில்லனாக குணச்சித்திர நடிகராக வளர்ந்து சமீப வருடங்களாக ‛ஜோசப், பணி' ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். தமிழில் ‛ஜகமே தந்திரம்', கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‛ரெட்ரோ, தக்லைப்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‛வரவு' என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்த ‛புதிய நியமம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கதாசிரியர் ஏ.கே சாஜன் இந்த படத்திற்கு கதை எழுதுகிறார்.
ஒரு பழிவாங்கும் டிராமாவாக இந்த படம் உருவாகிறது. அதற்கேற்றார் போல் பழி வாங்குதல் என்பது ஒரு மோசமான வியாபாரம் அல்ல என்பதை ஒரு டேக்லைன் ஆகவே குறிப்பிட்டுள்ளார்கள். இயக்குனர் ஷாஜி கைலாஷ் இதற்கு முன்பாக மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழில் ‛வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட சில படங்களையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.