செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். தற்போது ‛பராசக்தி, கராத்தே பாபு' போன்ற படங்களில் நடிக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக, பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற பட தயாரிப்பு நிறுவனம், ரவி மோகனுக்கு 15 கோடி சம்பளம் பேசி அதில் 6 கோடி ரூபாய் முன்பணம் தந்துள்ளனர். ஆனால் ஒப்பந்தப்படி ரவி படம் நடிக்கவில்லை என கூறி அவர் மீது தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன் பதில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ரவி மோகன் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்ய பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவால் ரவி மோகன் சொத்துக்கள் முடங்க வாய்ப்புள்ளது.