செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் கவின். இவர் நடித்த ‛லிப்ட், டாடா' படங்கள் வெற்றி அடைந்த நிலையில் கடைசியாக வெளிவந்த ‛பிளடி பெக்கர்' படம் சரியாக போகவில்லை. இந்த படத்திற்கு பின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ‛கிஸ்' என்ற படத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக ‛அயோத்தி' புகழ் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் செப்., 19ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛மதராஸி' படம் செப்., 5ல் ரிலீஸாவதால் இந்த படத்தை 19ம் தேதியில் வெளியிடுகின்றனர். பிளடி பெக்கர் படம் தோல்வியால் கிஸ் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் கவின்.