ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்த 'வார் 2' ஹிந்தித் திரைப்படம், தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகி கடந்த வாரம் வெளியானது. தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர் இப்படத்தில் நடித்திருந்ததால் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிட்டது.
படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சித்தாரா என்டர்டெயின்மென்ட் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி, “ஜுனியர் என்டிஆரை இதற்கு முன்பு தெலுங்குப் படங்களில் காட்டியதை விட இப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி அற்புதமாகக் காட்டியிருக்கிறார். இது பக்கா தெலுங்குப் படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
ஹிந்தியை விட தெலுங்கில் இந்தப் படம் ஒரு ரூபாயாவது அதிகம் வசூலித்து சாதனை படைக்கும். 'வார் 2' உங்களை ஏமாற்றாது, உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். படம் பார்த்த பிறகு நீங்கள் ஏமாந்தால், என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்,” என்றார்.
படம் வெளிவந்த பின் எதிர்பார்த்த அளவு நன்றாகவும் இல்லை, வசூலையும் பெறவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக தெலுங்கு ரசிகர்கள், நாக வம்சியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்தனர்.
அதற்கு நாகவம்சி, எக்ஸ் தளத்தில், “என்னது, என்னை ரொம்ப மிஸ் பண்ணுற மாதிரி இருக்கு. வம்சி இது, வம்சி அதுன்னு கவர்ச்சிகரமான கதைகளோடு முழு கலகலப்பு நடக்குது. பரவாயில்லை, X-ல நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க. உங்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு, ஆனா இன்னும் அந்த நேரம் வரல… குறைந்தது இன்னும் 10-15 வருஷம் இருக்கு. சினிமாவுல… சினிமாவுக்காக, எப்போவுமே! நம்ம அடுத்து விரைவில் சந்திப்போம்!,” என்று பதிலளித்துள்ளார்.
பட வெளியீட்டிற்கு முன்பாக அது சம்பந்தப்பட்டவர்கள் அடக்கிப் பேச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாகவம்சி போல ஓவராகப் பேசினால் கடைசியில் இப்படித்தான் மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும்.