தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் 500 கோடியை தொட்டுவிட்டது என்ற அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது. அது நடந்ததும் படக்குழுவை அழைத்து ஒரு சந்தோஷ பார்ட்டி வைக்கும் திட்டமும் இருக்கிறதாம். சில நாட்களுக்கு முன்பு படத்தின் வசூல் 404 கோடி என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 100 கோடி கூடுதலாக வசூலித்து இருக்க வாய்ப்பு. அதனால், 500 கோடி வசூலை கொண்டாட்ட நிகழ்வாக நடத்திவிட்டு, அடுத்த வேலைக்கு போகலாம் என்று படக்குழு நினைக்கிறதாம்.
ஒரு படம் அதிகம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு கார், செயின் பரிசளிப்பது வழக்கம். விக்ரம் வெற்றியை கொண்டாடிய நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் உதவி இயக்குனர்களுக்கு காஸ்ட்லி பைக், செயின் பரிசளித்தார். அந்த பட இயக்குனர் லோகேசுக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு காஸ்ட்லி கார் கொடுக்கப்பட்டது. ரஜினியும், அனிருத்தும் கூட கார் பெற்றார்கள். அந்த வரிசையில் கூலிக்காக காரை பரிசாக பெறுவாரா லோகேஷ் அல்லது உங்களுக்கு சம்பளமே போதும் என்று அனுப்பி விடுவார்களா என விரைவில் தெரியவரும்.