தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொனிடெலா வெங்கட் ராவ் - அஞ்சனா தேவியின் மூத்த மகன் கொனிடெலா சிவ சங்கர வர பிரசாத். இது சிரஞ்சீவியின் நிஜப்பெயர். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ஆனவர்களில் மிக முக்கியமானவர் சிரஞ்சீவி.
சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிப்பது பற்றிய ஆர்வம் அவருக்குள் ஏற்பட, காமர்ஸ் படிப்பை முடித்துக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வருகிறார். ஆஞ்சநேயர் மீது மிகுந்த பக்தி கொண்ட அவரது குடும்பம், "ஆஞ்சநேயர் போல சிரஞ்சீவியாக இரு" என வாழ்த்தியதோடு ஆஞ்சநேயரின் இன்னொரு பெயரான சிரஞ்சீவி என்பதையே அவருக்கு சினிமா பெயராகவும் சூட்டி அனுப்பி வைத்தனர்.
சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும், ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும் பல படங்களில் நடித்தார். அப்போது உடன் நடித்தவர்கள் "நீ எல்லாம் சூப்பர் ஸ்டாராக போகிறாயா? வேறு வேலை இருந்த போய் பாரு" என்று கிண்டலும், கேலியும் செய்தார்கள். சிரஞ்சிவி அப்போது முடிவு செய்தார். சூப்பர் ஸ்டார் ஆகி காட்டுவது என்று.
அவமானங்களை, புறகணிப்புகளை தாண்டி கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் ஆனார் சிரஞ்சீவி. 150 படங்களை தாண்டிய ஹீரோ, மகன், அண்ணன், தம்பி ஆகியோரையும் நடிகராக்கியவர், மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் என மக்கள் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் சிரஞ்சீவிக்கு இன்று வயது 70.