மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
கே.பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் 1981ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் அந்த 7 நாட்கள். 44 ஆண்டுகளுக்குபின் இதே தலைப்பில் ஒரு படம் உருவாகி உள்ளது. படத்தை இயக்குபவர் பாக்யராஜ் சிஷ்யர் எம்.சுந்தர். இந்த படத்தில் பாக்யராஜ் மந்திரியாக நடித்து இருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் கூறியது : இந்த தலைப்புக்கும் , அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பாக்யராஜிடம் பணியாற்றியதால் டார்லிங் டார்லிங், அந்த 7 நாட்கள் தலைப்பை யோசித்தேன். இந்த கதைக்கு 7 நாட்கள் தொடர்பு என்பதால் இதேயே முறைப்படி ரைட்ஸ் வாங்கி வைத்தேன். அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா நடிக்கிறார்கள். ஹீரோ வானியல் படிப்பவராகவும், ஹீரோயின் வக்கீலாகவும் வருகிறார்கள். சூரிய கிரகணத்துக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. சென்னை மற்றும் ஒரு மலை பிரதேசத்தில் கதை நடக்கிறது. என் மகன் சச்சின் சுந்தர் இசையமைத்து இருக்கிறார். என் குருநாதரை மந்திரியாக நடிக்க வைத்துள்ளேன். அவரும் ரொம்ப சின்சியராக நடித்து கொடுத்தார் என்றார்.