லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசிய டி.ராஜேந்தர் அந்த காலத்தில் படங்களில் நல்ல காமெடி இருந்தது. திறமையான காமெடி நடிகர்கள் இருந்தனர். உயிருள்ளவரை உஷா படத்தில் கூட கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்தனர். அடுத்து நான் இயக்கும் படத்தில் சில காமெடியன்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்றார்.
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் இருக்கிறது. இப்பவெல்லாம் வயிறு வலிக்க ஏன் மனம் விட்டு கூட சிரிக்கிற காமெடி வருவது இல்லை. விவேக், மனோ பாலா போன்றவர்கள் காலமாகிவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில் நடிப்பது இல்லை. வடிவேலு கதை நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். அவர் காமெடியும் முன்போல இல்லை. சூரி, சந்தானம் ஹீரோ ஆகிவிட்டார்கள். சதீஷ் கூட அந்த வழியில் செல்கிறார்.
கருணாகரன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சாம்ஸ் போன்றவர்கள் தவிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது இருக்கிற பெரிய காமெடியன் யோகிபாபு மட்டுமே. அவரும் பெரிய சிரிப்பை தருவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் காமெடிகள் உருவாகவில்லை. டி.ஆர்.சொன்னது மாதிரி கோலிவுட்டில் திறமையான காமெடியன்கள், நல்ல காமெடி படங்கள் இல்லாமல் வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா என்கிறார்கள்.