தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கோவை : ‛‛அரசியல் நாகரீகம் தெரியாத நடிகர் விஜய், பிரதமர் மோடி பற்றி பேச அருகதை இல்லை. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுவதாக'' நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் அவேசமாக பேசினார்.
‛பொன் விலங்கு' படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். தொடர்ந்து ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர வேடம் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
இதில் ரஞ்சித் பேசியதாவது... ‛‛மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார். 2014ல் கோவையில் பிரதமரை அவர் சந்தித்தபோது பூனைக்குட்டி போல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்ததை மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல, தம்பி மறந்துவிட்டார். மூளையில் பிரச்னை இருக்கு.
மிஸ்டர் மிஸ்டர் என சொடக்கு போட்டு பிரதமர் மோடியை பேசுகிறார். நான் ஒரு வாக்காளன். ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யாரென்றால் அது மோடி தான். இன்றைக்கு உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரு தலைவர் மோடி. அவரை கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓட்டால் குத்துவோம்''
இவ்வாறு பேசினார்.