தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்தவகையில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுதான் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனைக்கும் இதற்கு முன் நிவின்பாலி இப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது இல்லை. தெலுங்கு படங்களிலும் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் இந்த முறை பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிலும் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நிவின்பாலியின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.. எப்பொழுதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ஓம் சாந்தி ஒசானா மற்றும் பிரேமம் ஆகிய படங்கள்” என்று கூறியுள்ளார்.