திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
'மதராஸி' படத்தின் கதைப்படி துப்பாக்கி கலாச்சாரம் தமிழகத்தில் பரவாமல் இருக்க, அவர் அதிரடியில் இறங்கி, வில்லன்களை அழித்து மக்களைக் காப்பாற்றுகிறார். ஆனால், நிஜத்தில் 'மதராஸி' இருவரைக் காப்பாற்றியுள்ளார். அந்த இருவரில் ஒருவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ், மற்றொருவர் கதாநாயகி ருக்மிணி வசந்த்.
ஏஆர் முருகதாஸ் இதற்கு முன் இயக்கிய ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்', சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன. விஜய்யின் 65வது படத்தை இயக்க வேண்டிய முருகதாஸ், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் நடிக்க சில முக்கிய ஹீரோக்கள் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவரை நம்பி தன்னை ஒப்படைத்தார் சிவகார்த்திகேயன்.
அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் பெரும் வெற்றி பெற்று 300 கோடி வசூலித்தது. அதேசமயம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சிக்கந்தர்' தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 'மதராஸி' படம் மீதே வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொஞ்சம் பயத்துடன் இருந்தனர். ஆனால், நேற்று படத்தின் வசூலும், வரவேற்பும் அவர்களுக்கு நிறைவைத் தந்துள்ளது. படம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழில் 'ஏஸ்' மூலம் அறிமுகமான ருக்மிணி வசந்த்துக்கு அந்தப் படம் தோல்வியைத் தந்தது. அடுத்து அவர் நடித்த 'மதராஸி' வெற்றி பெற்றால்தான் அவருடைய பெயரும் காப்பாற்றப்படும். அதுவும் இந்தப் படத்தில் நடந்துள்ளது. படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நேற்று, இன்று, நாளை விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் நன்றாகவே இருக்கும் என்கிறார்கள்.