தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

1950ம் ஆண்டு வெளியான 'மந்திரி குமாரி'யில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். வில்லன் நம்பியார். ஆனால் நம்பியாரை விட அந்த படத்தில் பயங்கர வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் எஸ்.ஏ.நடராஜன். மற்ற இருவர் பேசப்பட்ட அளவிற்கு நடராஜன் பேசப்படவில்லை.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு வில்லன் நடிகர்களாக வந்தவர்கள் ஆர். நாகேந்திர ராவ், ரஞ்ஜன், எம்.என். நம்பியார், எஸ்.வி. ரங்கா ராவ், எம்.ஆர். ராதா ஆகியோர், வயதிலும், அனுபவத்திலும் மூத்த இவர்களை தாண்டி 'மந்திரிகுமாரி' என்ற ஒரே படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார் நடராஜன். அரசனைத் தனது தலையாட்டி பொம்மையாக வைத்திருக்கும் ராஜகுருவான எம்.என்.நம்பியாரின் மகன் பார்த்திபனாக நடித்தார் எஸ்.ஏ.நடராஜன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சோமனூத்து என்ற ஊரில் 1918ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஏ.நடராஜன். நாடகத்தின் மீது ஆர்வம் கொண்ட நடராஜன் 'நவாப்' ராஜமாணிக்கம் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்தார். வில்லன் வேடத்திலும் நடித்தார்.
சில வருடங்களுக்கு பிறகு நடராஜனுக்கு திரைப்படங்களின் பக்கம் கவனம் திரும்பியது. 'சதி சுகன்யா' என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 'கன்னியின் காதலி' படத்தில் வசந்தபுரி மன்னனாக நடித்தது அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் 'மந்திரி குமாரி'யும் 'மனோகரா'வும் எஸ்.ஏ.நடராஜனை நட்சத்திர வில்லன் நடிகராக மாற்றின. பல படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.
முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்த நடராஜன், 'நல்ல தங்கை” என்ற படத்தைத் தயாரித்து இயக்கவும் செய்தார். அதன் பின்னரும் தயாரித்த சில படங்களால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி சினிமாவை விட்டு விலகினார்.