தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்தியத் திரையுலகத்தில் எந்த ஒரு திரையுலகமும் சாதிக்காத ஒரு விஷயத்தை மலையாளத் திரையுலகம் சாதித்துள்ளது. டாப் நடிகை என்ற வரிசையில் இல்லாத கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 'லோகா சாப்டர் 1: சந்திரா' படம் 200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. எந்த ஒரு தென்னிந்திய கதாநாயகியும் 100 கோடி வசூலைக் கூடப் பெற்றதில்லை. ஆனால், கல்யாணி 200 கோடி வசூலை சாதித்துள்ளார்.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காத ஒரு படமாக வெளிவந்து 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 20 கோடிதான். அதை விட 10 கோடி கூடுதலாக 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'லோகா' படம் 200 கோடியைக் கடந்துள்ளது. அடுத்தடுத்த வருடங்களில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இரண்டு படங்கள் இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
'லோகா' படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் 250 கோடி வசூலைப் பெறுவது உறுதி. இந்தப் படத்தின் வெற்றியால் இதன் அடுத்தடுத்த பாகங்களுக்கு இப்போதே நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.