மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்தை தற்போது தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, நோரா பதேகி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படத்தில் கிராமபிக்ஸ் காட்சிகளும் அதிகமாக இடம்பெறுவதால் முந்தையை பாகங்களைவிட இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் வழக்கத்தை விட அதிகமான நாட்கள் நடைபெறும் என்றும் காஞ்சனா- 4 பட குழுவில் கூறுகிறார்கள்.
இந்த படத்திற்கு தமிழைப் போலவே தெலுங்கில் இப்போதே வரவேற்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். காரணம் இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா மற்றும் காஞ்சனா-3 படங்கள் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது. குறிப்பாக, காஞ்சனா 3 தெலுங்கில் வெளியானபோது நானியின் ஜெர்ஸி படத்துக்கு கடுமையான டப் கொடுத்தது. இதன் காரணமாகவே இப்போது காஞ்சனா 4 படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு அங்குள்ள வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாம். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவித்து வியாபாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளாராம் லாரன்ஸ்.