தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

டில்லி செங்கோட்டை மைதானத்தில், லவ குஷ் ராமலீலா குழு சார்பில் ஆண்டுதோறும் ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடகத்தில் மண்டோதரி கேரக்டரில் பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வருபவர், புனிதமான ஒரு நாடகத்தில் அதுவும் மண்டோதரி கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது பக்தர்களின் மனதை புண்படுத்தும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் ராமலீலா குழுவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், 'ராமலீலா என்பது வெறும் நாடகம் அல்ல. அது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். மண்டோதரி கதாபாத்திரம் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவிக்கான இலக்கணமாக கருதப்படுகிறது. எனவே, ஒரு நடிகையின் பொதுவாழ்க்கை அந்த கதாபாத்திரத்தின் மாண்புடன் பொருந்தியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இந்த நாடகத்தில் இருந்து பூனம் பாண்டே நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




