இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி நடிக்கும் ‛வா வாத்தியார்' படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. சூர்யாவின் கங்குவா பட ரிலீஸ் பிரச்னைகள், பைனான்ஸ் விவரங்களால் இந்த பட ரிலீஸ் தாமதமானது. கார்த்தியும் அடுத்தடுத்த படங்களுக்கு சென்றார்.
இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி வா வாத்தியார் ரிலீஸ் ஆகிறது. இதில் எம்ஜிஆர் ரசிகராக போலீஸ் அதிகாரியாக கார்த்தி வருகிறார். நலன் குமாரசாமியின் ‛சூது கவ்வும்' படம் போல இதுவும் காமெடி கலந்த கதை என்று கூறப்படுகிறது.




