தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான இமேஜ் சரிந்துள்ளது. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் எதிர்பார்த்து வருகிறார்.
இதுவரையில் விஜய் பேசிய போதெல்லாம் 'திமுக என் அரசியல் எதிரி, பா.ஜ., என் கொள்கை எதிரி' என்றே பேசி வந்திருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதனிடையே, ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
தனது அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்த போது தேர்தலில் தனித்து நின்றதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் நிற்கும் போதுதான் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது என தன் கட்சியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்றே தனது கட்சித் தொண்டர்களிடம் பேசி வந்த விஜய், அதை விட்டுவிட்டு கூட்டணி சேர்ந்து, வேறொருவர் முதல்வர் ஆக ஆதரவு கொடுப்பாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.