தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

காப்புரிமை தொடர்பாக, 'சோனி' நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பாடல்கள் காப்புரிமை தொடர்பாக பதிவு செய்த ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டதால் இசையமைப்பாளர் இளையராஜாவின், 'இளையராஜா மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி, 'சோனி' நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே வேறு ஒரு விவகாரத்தில், 'சோனி' நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, 'சோனி' நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சோனி' நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பது வேறு திரைப்படங்கள் தொடர்புடைய புதிய வழக்கு. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கை, மூல வழக்கு நடக்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.
'இந்த கோரிக்கையை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன் வைக்கலாமே' என, தலைமை நீதிபதி கேட்டபோது, ''அப்படியானால் எங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என, சிங்வி கோரிக்கை விடுத்தார்.
'எதிர்மனுதாரரை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, திட்டவட்டமாக கூறிய தலைமை நீதிபதி, 'இது தொடர்பாக இளையராஜா தரப்பு மூன்று வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தார்.