தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சென்னையில் 'இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025' நேற்று தொடங்கியது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்துகிறது.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவை தஜிகிஸ்தான், பெலாரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் பி.ஆர். முத்துக்குமார் தொடங்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் பி.வாசு, வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகத் தலைவர் திரு. எஸ். விஜயகுமார் , இந்திய சுற்றுலா அமைச்சக பிராந்திய இயக்குநர் வெங்கடேசன் தத்தாரேயன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கர் பாங், சென்னையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதர் ரச்சா அரிபார்க், மியான்மர் கௌரவ தூதர் ஜே. ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவின் சார்பில் பொன்னியின் செல்வன், 12த் பெயில் படங்கள் திரையிடப்படுகிறது.