தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தீபாவளி ரேஸில் டியூட், பைசன் படங்கள் வெற்றி பெற்ற நிலையில், நேற்று ஐஏஎஸ் கண்ணம்மா, துச்சாதனன் என 2 சின்ன படங்கள் மட்டுமே வெளியாகின. அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் 31ம் தேதி விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன், மற்றும் ரியோ நடித்த ஆண்பாவம் பொல்லாததது, பூவையாரின் ராம் அப்துல்லா ஆண்டனி, புதுமுகங்கள் நடிக்கும் தடை அதை உடை, மற்றும் வட்டக்கானல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
நவம்பர் மாதம் துல்கர் சல்மானின் காந்தா மற்றும் கவின் நடிக்கும் மாஸ்க் மற்றும் அதர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் படங்கள் வராத நிலையில், டிசம்பர் 5ல் கார்த்தியின் வா வாத்தியார், டிசம்பர் 18ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே மட்டுமே வருகிறது. பொங்கலுக்கு தான் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் வெளியாக உள்ளது. ஆக, இன்னும் 2 மாதங்கள் டல் சீசன் தான் கோலிவுட்டில் என்கிறார்கள்.