தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய படங்கள், அல்லது பிரம்மாண்டத் திரைப்படங்கள் வெளியாகும் போது, டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா அரசுகள் வழக்கமாக வைத்திருக்கின்றன.
சமீபத்தில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'ஓஜி' படம் வெளிவந்த போதும் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு தெலுங்கானா மாநிலத்திலும், ஒரு வாரத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் திரையுலகில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இனி, தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் இப்படியான கட்டண உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் என்னிடம் டிக்கெட் விலை உயர்வு கோரி வருகின்றனர். அதிகரித்த வருவாயில் சில சதவீதத்தை திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் அவர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் பெறுகின்றனர், ஆனால் தொழிலாளர்களுக்கு அது பயன்படவில்லை. இனிமேல், எந்தப் படத்திற்கும் டிக்கெட் உயர்வு, அரசாணை தேவைப்பட்டால், சம்பாதித்த கூடுதல் வருமானத்தில் 20 சதவீதம் திரைப்படத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும்,” என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்.