தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கேரள மாநில அரசின் 2024ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை 'பிரம்மயுகம்' படத்திற்காக நடிகர் மம்முட்டி பெற்றுள்ளார். இதனுடன் சேர்த்து 7வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் மம்முட்டி.
மாநில விருதை வென்ற மம்முட்டி அதற்காக நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில், “மஞ்சும்மல் பாய்ஸ், பொகன்வில்லா, பிரேமலு' படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் — ஷம்லா ஹம்சா, ஆசிப், டோவினோ, சவுபின், சித்தார்த், ஜோதிர்மயி, லிஜோ மோல், தர்ஷனா, சிதம்பரம் — கேரள மாநில விருதுகளை வென்றதற்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
பிரம்மயுகம் படக்குழுவினருக்கு மிகப் பெரிய நன்றி — எனக்கு மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளித்ததற்காக. கோடுமன் பொட்டியை (படத்தில் மம்முட்டியின் கதாபாத்திர பெயர்) இவ்வளவு அன்போடு வரவேற்ற ரசிகர்களுக்கு இந்த விருதை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.