திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

கன்னட திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இயக்குனரும் நடிகருமான உபேந்திரா மற்றும் நடிகை பிரியங்கா திரிவேதி. இதில் உபேந்திரா 'கூலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரியங்கா திரிவேதி அஜித்துடன் 'ராஜா' மற்றும் விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களது மொபைல் போனிலிருந்து உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்திற்கு தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி செய்தி அனுப்பிய மர்ம நபர்கள் வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அளவில் மோசடியும் செய்தனர்.
இந்த விவரம் தெரிந்ததும் சைபர் கிரைமில் புகார் அளித்த உபேந்திரா மற்றும் பிரியங்கா திரிவேதி இருவரும் தங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்கள் மற்றும் தங்களது நட்பு வட்டாரத்தை எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த மோசடி செயலில் ஈடுபட்ட பீஹாரை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை பெங்களூரு சதாசிவ நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதில் பீஹாரில் உள்ள தசரத் பூரை சேர்ந்த விகாஸ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. தற்போது விகாஸ் குமாரை கைது செய்துள்ள நிலையில் இதன் பின்னணியில் இன்னும் இது போன்ற மோசடிகளில் பீஹாரை சேர்ந்த 150 பேர் கொண்ட இளைஞர் குழு செயல்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.