பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே, டிராகன், டியூட்' என ஹாட்ரிக் 100 கோடிபடங்களைக் கொடுத்துள்ளார். இந்த வருடம் அவரது நடிப்பில் 'டிராகன், டியூட்' படங்கள் வந்ததையடுத்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக எல்.ஐ.கே) டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வெளியீடு ஏற்கெனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதீப் ரங்கநாதன் நடித்த மற்றொரு படமான 'டியூட்' படத்தின் வெளியீட்டையும் அதே நாளில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அவர்கள் படத்தைத் தள்ளி வைக்க மறுத்துவிட்டனர். எனவே, 'எல்ஐகே' அவர்களாகவே முன்வந்து படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவை விற்கப்படாத நிலையில் படம் டிசம்பர் 18ல் வெளியாகுமே என்ற சந்தேகம் திரையுலகில் இருந்தது. இருந்ததாலும் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், அந்த உரிமைகளை பட வெளியீட்டிற்குப் பிறகு விற்றுக் கொள்ளலாம் என அதிரடி முடிவு எடுத்துவிட்டாராம். அதனால், எந்த சிக்கலும் இல்லாமல் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்கள்.