தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மறைந்த நடிகர்கள் நடித்த படங்கள் அவ்வப்போது கோலிவுட்டில் வருவது உண்டு. கால தாமதம், வேறு சில பிரச்னைகள் காரணமாக காலமான சில நடிகர்கள் நடித்த படங்கள் கொஞ்சம் லேட்டாகவும் வரும். அந்த வகையில் மறைந்த டில்லி கணேஷ் நடித்த 'யெல்லோ' என்ற படம் கடந்த வாரம் வெளியானது. அவரின் இயல்பான நடிப்பை திரையில் பார்த்தவர்கள், டில்லி கணேஷ் குறித்த மலரும் நினைவுகளில் மூழ்கினார்கள்.
அதேபோல் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கதை நாயகனாக நடித்த 'பிபி180' என்ற படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஒரு டாக்டருக்கும், காசி ரவுடியான டேனியல் பாலாஜிக்குமான பிரச்னைகள், மோதல்களே படக்கதை. இந்த படத்தை பார்த்தவர்கள் டேனியல் பாலாஜியின் நடிப்பை பாராட்டி உள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் ஜேபி கூறுகையில், ''நான் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர். முதலில் அந்த கேரக்டரில் வேறு ஒரு நடிகர் நடிப்பதாக இருந்தது. அவர் சில கண்டிசன்கள் போட்டதால், டேனியல் பாலாஜியிடம் போய் கதை சொன்னேன். உடனே எந்த தயக்கமும் இல்லாமல் அர்னால்டு என்ற கேரக்டரில் நான்தானே நடிக்கப்போகிறேன் என்றார். ஆம், என்றேன். உடனே அந்த கேரக்டருக்கு தயார் ஆகிவிட்டார்.
படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். படம் பார்த்தவர்கள் டேனியல் பாலாஜியின் நடிப்பை, அவரின் கோபத்தை, சினிமா மீதான ஆர்வத்தை பாராட்டுகிறார்கள். எங்கள் படக்குழுவை பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டதாகவே நினைக்கவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அந்த பீலிங் வரும்'' என்றார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 48வயதில் டேனியல் பாலாஜி காலமானது குறிப்பிடத்தக்கது.