படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ம்ருதி வெங்கட். அதன்பிறகு தடம், மூக்குத்தி அம்மன், வனம், தீர்ப்புகள் விற்கப்படும், மன்மத லீலை, குற்றம் குற்றமே, ரன் பேபி ரன், தருணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'ஸ்டீபன்'.
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜே.எம் புரொடக்சன் சார்பில் ஜெயக்குமார் மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
படம் குறித்து மிதுன் பாலாஜி கூறும்போது "குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல், ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'. படத்தில் உள்ள முக்கிய அம்சம்" என்றார்.