டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த பத்து வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெற்றன. அதனால் இந்த மூன்றாம் பாகத்திற்கு தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் விதமாக தற்போது திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் ஹிந்தியில் இதன் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தை வெளியிடும் உரிமையை மும்பையை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் ஜீத்து ஜோசப்பிடம் தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இதன் வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதால் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தான் இந்த படம் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இதனால் எந்த மாற்றமும் இல்லை. முதலில் மலையாளத்தில் தான் திரிஷ்யம் 3 வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.