மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மலையாள திரையுலகில் ஐந்து வருடங்களுக்கு முன்பு 100 கோடி வசூல் இலக்கு என்பதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. ஆனால் சமீப வருடங்களில் மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார் படங்கள் மட்டுமல்லாமல் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அறிமுகமில்லாத நடிகர்களின் படம் கூட 100 கோடி மட்டுமல்ல 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 240 கோடி வசூலித்து மலையாள திரை உலகின் அதிகபட்ச வசூலைத் தொட்ட படம் என்ற சாதனை செய்தது.
இந்த வருடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 ; சந்திரா திரைப்படம் 260 கோடிக்கு மேல் வசூலித்து அந்த சாதனையை முறியடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் சமீபத்தில் வெளியான தனது விலாயத் புத்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, “இன்றைய தேதிக்கு மலையாள சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் லோகா படம் தன்வசப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாளை இந்த சாதனையை கைப்பற்ற இன்னொரு படம் வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
லோகா படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.