ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு திரைப்பட துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்காக பையனூரில் இலவச இடம் வழங்கினார். அந்த இடத்தில் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தலைமையிலான பெப்சி நிர்வாகம், எந்தவித முன் அனுமதியும் இன்றி, வீடு கட்டித் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தனர். மேலும், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் அனுமதி இல்லாமல் முறைகேடாக திரைப்பட தொழிலாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததும் அம்பலமானது.
மேலும், அந்த இடத்தில் அனுமதி இன்றி ஸ்டூடியோ கட்டி அதன்மூலம் வரும் வருமான தொகையை சங்க கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்து, கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பெப்சி நிர்வாகம், இனி பொய் வாக்குறுதிகள் கூறி பணம் வசூல் செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை வீட்டு வசதி வாரியம் பிறப்பித்தது. இந்த நிலையில், பையனூர் இடத்தில் அனுமதியின்றி படப்பிடிப்பு தளம் கட்டி, அதிலிருந்து பல கோடிகள் வருமானத்தால் தனிப்பட்ட முறையில் ஆர்கே செல்வமணி தலைமையிலான பெப்சி மட்டுமே பயனடைந்து வருவதும், கூட்டுறவு வீட்டு வசதி வாரியத்திற்கு தெரியாமல் இந்த முறைகேடு நடந்து வருவதும் ஆதாரங்களோடு நிரூபணம் ஆனது.
அது தொடர்பான கூட்டுறவு சங்க சட்டம் பிரிவு 81ன் கீழ் துறை சார்ந்த விசாரணையும் தற்போது நிலுவையில் உள்ளது. விசாரணையில் பல்வேறு நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அதனை வட்டியுடன் வசூலிக்க தண்ட கட்டணம், தவறில் ஈடுபட்ட நிர்வாக குழுவினரை தகுதி நீக்கம் செய்தல் மற்றும் வணிக குற்ற புலனாய்வு காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சட்டபூர்வ விசாரணை காலம் 6 மாதங்கள் உள்ள நிலையில் தற்போழுது விசாரணை முடிக்கப்பட்டு விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றது என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்கையில், இந்த விசாரணை நடவடிக்கையில் இருந்து தப்பும் நோக்கத்தோடும், செய்த முறைகேடுகளுக்கு விரைவில் கிடைக்கப் போகும் தண்டனையை தவிர்க்கவும், பிரச்னையை திசை திருப்பி அரசு துறைகளையும் அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தும் திட்டத்துடனும், நாளை (டிச.,1) ஒருமைப்பாடு தினக் கூட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார் ஆர்.கே. செல்வமணி. எதிர்ப்பு அதிகமானதை அடுத்து அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதன் மூலம் செய்த தவறுகள் அனைத்தையும் மூடி மறைத்து விடலாம் ஆர்.கே.செல்வமணி திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெப்சி சார்ந்த முறைகேடுகள், சிக்கல்கள், விசாரணைகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது. செல்வமணியின் முறைகேடு பற்றிய விஷயங்கள் தெரிந்தால் நிச்சயம் பெப்சி செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் திரைப்பட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.