'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் | சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கலையரசனின் மகள்! | 'டாக்சிக்' படத்தில் ரெபேக்கா ஆக தாரா சுட்டாரியா! | விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம் 2' படம் நிறுத்தி வைப்பு! : தயாரிப்பாளர் தகவல் | நிவின் பாலியின் முதல் 100 கோடி படம் 'சர்வம் மாயா' | தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இயக்குனர் பாரதிராஜா | ராகவேந்திரா மண்டபம் உருவாக காரணமானவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த் பேச்சு | உறுதியான 'பகவந்த் கேசரி' ரீமேக், மற்ற மொழிகளில் வரவேற்பு இருக்குமா? |

மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் சிறைவாசம் அனுபவித்து, தற்போது அவர் நிரபராதி என மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப்பின் ஆதரவாளர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகைகள் பார்வதி, ரீமா கலிங்கல், உள்ளிட்ட பலரும் இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் பாதிக்கப்பட்ட நடிகையுடன் பல படங்களில் இணைந்து நடித்தவரும் அவரது நண்பருமான நடிகர் ஆசிப் அலி இந்த தீர்ப்பு குறித்து கூறும் போது, “எப்போதுமே நான் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் தான் நிற்கிறேன்.. ஆனால் இந்த தீர்ப்பை மதிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நடிகை அந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து முதன் முதலாக நேரில் சென்று தனக்கு நேர்ந்த அவமானத்தை விளக்கியது பிரபல வில்லன் நடிகர் லாலிடம் தான். அவர்தான் அப்போது நடிகைக்கு ஆதரவாக போலீசில் புகார் அளிக்கும் வரை உடன் இருந்தார். தற்போதைய தீர்ப்பு பற்றி அவர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று மட்டும் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு திலீப்புக்கு ஆதரவாக வந்தாலும் கூட தீர்ப்பை கடுமையாக விமர்சிக்க கூடாது என்பதால், “மாப்பிள்ளை அவர்தான்.. ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்கிற பாணியில் பலரும் நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவருக்காக குரல் கொடுப்பதுடன், தற்போது வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும் பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.