சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வரும் நிவின்பாலி சமீப காலமாக அங்கே ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார். அதே சமயம் தமிழிலும் சமீப காலமாக ஆர்வம் காட்டி நடித்து வரும் நிவின்பாலி, ராம் இயக்கத்தில் நடித்த 'ஏழு கடல் ஏழு மலை' ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அடுத்ததாக தற்போது 'ரெமோ, சுல்தான்' பட பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்த படத்தில் 'வால்டர்' என்கிற ஒரு முரட்டுத்தனமான அதே சமயம் கொஞ்சம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நிவின்பாலி.
அதுமட்டுமல்ல, இந்த படத்தில் தன்னை நடிக்க அழைத்தது இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு அல்ல என்றும், வேறு ஒரு கதாபாத்திரத்திற்காக தான் என்றும் ஒரு புதிய தகவலை தற்போது கூறியுள்ள நிவின்பாலி, ஆனால் கடைசியில் என்னை இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் நிவின்பாலி முதலில் நடிக்க அழைக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் தான் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.