வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சினிமாவில் சில சமயங்களில் சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படி ஒரு ஆச்சரியம் ரவி மோகனுக்கு நடக்கப் போகிறது. ஜெயம் ரவியாக இருந்தவர் ரவி மோகன் என தனது பெயரை மாற்றிய பின் இந்த 2025ம் ஆண்டு பொங்கலுக்கு அந்தப் பெயரில் வந்த படமாக 'காதலிக்க நேரமில்லை' படம் இருந்தது. அப்படம் ஒரு சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது.
அதற்குப் பின் இந்த வருடத்தில் ரவி மோகன் நடித்து எந்தப் படமும் வரவில்லை. ஆனால், 2026 பொங்கலுக்கு அவர் வில்லனாக நடித்துள்ள 'பராசக்தி' படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் தான் படத்தின் கதாநாயகன் என்றாலும் படத்தின் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் நடிக்க சம்மதித்துள்ளார் ரவி மோகன். இப்படத்தின் புரமோஷன்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன.
ரவி மோகன் என பெயரை மாற்றி முதலில் கதாநாயகனாகவும், அடுத்து வில்லனாக நடிக்க சம்மதித்ததும் ஆச்சரியம்தான்.
அடுத்து 'கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கோட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். அதோடு யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். இவற்றில் 'ப்ரோ கோட், ஆன் ஆர்டினரி' ஆகிய படங்களை அவரது சொந்தத் தயாரிப்பாக புதிதாக ஆரம்பித்த ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இவை அனைத்தும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.