70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் |

தமிழ் சினிமாவில் நாட்டியத்திலும் நடிப்பிலும் முன்னணியில் இருந்த பத்மினி, ராகினி சகோதரிகள் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அவற்றில் முக்கியமான படம் 'கொய்தி'. இந்தப் படத்தை முகமத் முகைதீன் இயக்கி இருந்தார். சுரேஷ் என்ற ஹிந்தி நடிகருடன் பத்மினி, ராகினி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெறாத இந்த படத்தை பத்மினி, ராகினி நடித்திருந்ததால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். படத்திற்கு 'மகுடம் காத்த மங்கை' என்று தலைப்பு வைத்தனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார், மருதகாசி தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதினார். இங்கும் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் ஹிட்டானது.




