Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம்

22 பிப், 2026 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Amina-Rafiq-Exclusive-Interview-for-suday-special
Advertisement


தமிழ் சினிமா பின்னணி பாடகிகளில் புதிய அறிமுகம் அமீனா ரபீக். இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகளான இவர் முதல் முறையாக மதுரையில் இசைக் கச்சேரி நடத்தினார்.

இதற்காக வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெலுக்காக நம்மிடம் பேசியது...

மதுரை மக்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்; ஆனால், 'அமீனா ரபீக்' என என் பெயரில் நடந்த முதல் மேடை நிகழ்ச்சி இது. மதுரைக்காக, நம்ம தமிழ் மக்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தியது மகிழ்ச்சி.

முதல்முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். நான் ஒரு சாப்பாட்டு பிரியை, வந்த உடனே மட்டன் பிரியாணி, பரோட்டா, கோலா உருண்டை என ஒரு புடி புடிச்சேன். மதுரைன்னாலே சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை. இதற்காகவே மீண்டும் மீண்டும் மதுரைக்கு வருவேன்.

மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொன்னதும் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தினார். எனக்கு எல்லாமும் அம்மா தான். நான் பாட, இசையில் இருக்க, நான் பண்ணும் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தான் உள்ளார். ''காந்தி டாக்ஸ்'' படத்தில் 'ஏதோ ஏதோ' என்ற பாடலை ரஹ்மானின் இசையில் பாடினேன். அண்ணன் ஏ.எச். காஷிப்பும் இசையமைப்பாளர் தான், அவரது கம்போசிங்கிலும் பாடுகிறேன்.

எல்லா இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடணும் என்று தான் ஆசை. ஜி.வி.பிரகாஷ் இசைக்கு என் வாய்ஸ் 'செட்' ஆனால் நிச்சயம் கூப்பிடுவார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துபவரும் அவர் தான். எனக்கு இசையமைக்க ஆசை உள்ளது. விரைவில் ஆல்பம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறேன். விருது வாங்கும் ஆசை உள்ளது. அதற்காக உழைத்து என்னை தயார்படுத்துவேன்.

முத்த மழை பாடல் ரெக்கார்டிங்கில் நான் கோரஸ் பாடி, கேட்டபோதே இந்த பாடல் நிச்சயம் ஹிட் அடிக்கும் என நினைத்தேன். எதிர்பார்த்தது போலவே நடந்தது. அந்த பாடலுக்கு பின் எனக்கு கிடைத்த வரவேற்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

நான் பாடும்போது ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அது தான் எனது சிறப்பு என நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்தது எல்லாம் இசை, பாட்டு மட்டுமே. நடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது.

மெலடி என்றைக்கும் குறையாது, அதற்கான பாடல்கள் வந்து கொண்டே தான் இருக்கும். நான் ரொமான்டிக்கான ஆள். சோக பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் ஆல்பம் போட்டால் அந்த மாதிரி ஹார்ட் பிரேக்கிங் பாடல்கள் தருவேன். எனக்கு எந்த ஹார்ட் பிரேக்கிங்கும் இல்லை என சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு அமீனா தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நடிகையர் திலகம்' சாவித்திரி!'நடிகையர் திலகம்' சாவித்திரி! தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap