Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இது கமல் ரஜினி பட கணக்கு

22 பிப், 2026 - 12:38 IST
எழுத்தின் அளவு:
This-is-Kamal-Rajinis-movie-account.
Advertisement


நெல்சன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரஜினி கமலும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படம் குறித்த முன்னோட்டம் நேற்று காலை 12:07 வெளியானது. இது என்ன கணக்கு என்று விசாரித்தால் ரஜினிகாந்த் பிறந்த தினம் 12 கமல்ஹாசனின் பிறந்த தினம் 7 என்கிறார்கள். 47 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். 1979க்கு பின் அதாவது ‛அலாவுதீனும் அற்புத விளக்கு' படத்துக்கு பின் இருவரும் தமிழில் இணைந்து நடிக்கவில்லை. இதற்கு முன் ‛அபூர்வ சகோதரர்கள், 16 வயதினிலே, தப்பு தாளங்கள், தில்லு முல்லு' உள்ளிட்ட 18 படங்களில் இவர்கள் இணைந்து நடித்த உள்ளனர். இதில் தெலுங்கு, இந்தி படமும் அடக்கம்.

66 ஆண்டு சினிமா அனுபவம் கொண்ட கமலுக்கு இது 238வது படம், 50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ரஜினிக்கு 174வது படம். ரஜினிக்கு வயது 75, கமலுக்கு வயது 71. இப்பொழுது ‛ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அடுத்து கமல் தயாரிக்க சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதற்கடுத்து தான் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஆரம்பித்து அதற்கு அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்பு. கமலும் அன்பறிவ் இயங்கும் படம், ‛கல்கி 2898 ஏடி' 2ம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கமல், ரஜினி சம்பளம் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் மட்டுமே ஒட்டுமொத்தமாக 500 கோடியை தாண்டும் இந்த படம் ஆயிரம் கோடி அளவுக்கு வசூலிக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி!சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் ... 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap