காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‛வாரணாசி' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவிடம் இயக்குனர் ராஜமவுலி கதை சொல்ல வந்தபோது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த படத்தில் எனக்கு நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
அந்த பேட்டியின் போது நடிகர் மகேஷ்பாபுவும் உடன் இருந்தார். அப்போது பிரியங்கா கூறுகையில், நான் படங்களில் நடனமாடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த படத்தில் எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராஜமவுலியிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
“அதற்கென்ன.. மகேஷ்பாபுவும் இதே போல சிறிய வருத்தத்தில் இருக்கிறார். அருமையான டான்ஸ் நபராக உருவாக்கி விடலாம்” என்று உறுதி அளித்தாராம் ராஜமவுலி.




