காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யாபாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத 12ம் தேதியில் முதலில் திட்டமிட்டிருந்தனர். ஏனெனில், ஜெயிலர், 2023ம் ஆண்டில் ஆகஸ்ட் 10ம் தேதியன்று திரைக்கு வந்து வெற்றி பெற்றதால் இதனை செண்டிமெண்ட் ஆக கருதி ஜெயிலர் 2ம் பாகத்தை ஆகஸ்ட்டில் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது ஜெயிலர் 2 படத்தின் பணிகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும் காரணத்தால் நீண்ட மாதங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம் என்கிற பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.