பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' | மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை |

தமிழ் சினிமாவில் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு என சில படங்களின் விழாக்கள் நடக்கும் போது அந்தப் படங்களில் நடித்த கதாநாயகிகளில் சிலர் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வேறு படங்களில் நடித்து வருவதால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என ஒரு காரணத்தை படக்குழுவினர் சொல்வார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே உண்மை என்ன என்பதைப் பற்றிப் பேசுவார்கள். சில நடிகைகள் அவர்களது பட விழாக்களில் கூட கலந்து கொள்ளாத 'கொள்கை' வைத்திருப்பார்கள்.
விழாக்களில் கலந்து கொள்ளாததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஓரிரு படங்களில் நடித்த நடிகைகள் கூட அவர்களது சமூக வலைத்தளங்களில் சில பல லட்சம் பாலோயர்களை வைத்திருப்பார்கள். ஆனால், சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த தங்களது படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு கூட போடாத நடிகைகள் இருக்கிறார்கள். படம் ஆரம்பிக்கும் போது பதிவு போடுவதை விட படம் வெளியாகும் போது ஏதோ ஒன்றிரண்டு பதிவு போட்டால்தானே படம் வெளிவருவதாவது தெரியும். படத்தின் ஒரே ஒரு போஸ்டர் அல்லது படம் பற்றிய ஒரே ஒரு பதிவு போட்டால் கூட ஏதோ கொஞ்சம் ரசிகர்களாவது அப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்று போய்ப் பார்ப்பார்கள்.
கடந்த மாதம் வெளிவந்த 'லாக்டவுன்' படம் பற்றி அப்படத்தின் முதன்மைக் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரன் ஒரு பதிவு கூட போடவில்லை. கடந்த வாரம் வெளியான 'கா' படம் பற்றி அப்படத்தின் முதன்மைக் கதாநாயகியான ஆண்ட்ரியாவும் எதுவுமே பதிவிடவில்லை. இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள்தான்.
கதை கேட்டு பிடித்துதான் அந்தப் படங்களில் நடித்து கொடுத்திருப்பார்கள். படம் எப்படி வந்திருந்தாலும் ஒரு குறைந்தபட்ச வரவேற்புக்காவது அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு போடலாம். இரண்டு படங்களுமே வந்த சுவடு தெரியாத படங்களாகவே உள்ளன. பாவம் அப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.




