Advertisement

சிறப்புச்செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்'

23 பிப், 2026 - 01:30 IST
எழுத்தின் அளவு:
Jananayagan-keeps-silent
Advertisement

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த சத்தமும் இல்லை. ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் காரணமாக தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று கடைசியாக வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அதன்பின் தணிக்கை வாரியத்தின் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து கொடுக்கும் திருத்தங்களைச் செய்து படத்தின் தணிக்கையை முடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. வழக்கு வாபஸ் பெற்று இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ரிவைசிங் கமிட்டியின் நடைமுறை இருபது நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றார்கள்.

ஆனால், 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை நிலை என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அவர்களது மற்றொரு தயாரிப்பான 'டாக்சிக்' படத்தின் உலகளாவிய வினியோகத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். மார்ச் 19ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

'ஜனநாயகன்' படம் குறித்து விஜய் தரப்பிலிருந்தும், அவரது கட்சி தரப்பிலிருந்தும் கூட தணிக்கை விவகாரம் குறித்து எந்த ஒரு விமர்சனமும் வைக்கப்படவில்லை. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளதாலும், விஜய் மீண்டும் சுற்றுப் பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதாலும் அவர்களும் பட வெளியீட்டைப் பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமாபாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap