ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி |

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்., 26ம் தேதி உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றது. இப்படி அவர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பரபரப்புகள் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் புதிய படமான ரணபலி என்ற படத்தின் முதல் தனிப் பாடலை படக் குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் பிரிட்டிஷ் காலகட்ட 19ஆம் நூற்றாண்டு கதையில் உருவாகிறது. விஜய் தேவரகொண்டா ரணபலியாகவும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற வேடத்திலும் நடிக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் நடிப்பில் வெளியாக போகும் முதல் படம் இதுவாகும். இந்நிலையில் ரணபலி மற்றும் ஜெயம்மா இடையே காதலை கொண்டாடும் வகையில் முதல் பாடலாக எத்தைய்யா சாமி என்ற பாடலை இன்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
இந்த பாடலில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ஜோடி பாரம்பரிய உடையில், மருதாணி அலங்கரிக்கப்பட்ட கைகள் மற்றும் பழமையான பின்னணியில் அலங்கரிக்கப்பட்ட தங்க நகைகளுடன் இடம் பெற்றுள்ளார்கள். இப்படத்தின் இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இந்த பாடலை இந்த ஜோடியின் திருமணத்தை கொண்டாடும் ஒரு சிறிய பரிசு என்று தெரிவித்திருக்கிறார். இப்படத்திற்கு அஜய் அதுல் என்பவர் இசை அமைக்கிறார்.
இப்பாடல், தெலுங்கு, ஹிந்தி , தமிழ், மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ள நிலையில் இந்த ரணபலி அவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும். இந்த வரலாற்று படம், 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.