Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா

05 மார், 2026 - 03:43 IST
எழுத்தின் அளவு:
Flashback-Baby-Uma-suddenly-disappeared
Advertisement


பெரிய நட்சத்திரங்களை போன்றே அன்றைய குழந்தை நட்சத்திரங்களுக்கும் பெரிய மதிப்பு இருந்தது. அழகான குழந்தைகள் திரையில் தோன்றுவதையும், பேசுவதையும், அவர்கள் சேட்டைகளையும் ரசித்தார்கள். இதனாலேயே குழந்தைகளுக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் அப்போது தயாரானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரம் உச்சத்தில் இருந்தார்.

அப்படி இருந்த ஒரு நட்சத்திரம்தான் பேபி உமா. புகழ்பெற்ற 'லவ குசா' படத்தில் 'லவ' கேரக்டரில் நடித்தவர். ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடித்த 'வண்ணக்கிளி' படத்தில் மனோகரின் மகளாக, தாயில்லா பிள்ளையாக நடித்தார். 'சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா, சொன்னப் பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா' என்ற. பாடலை பேபி உமாவுக்காக பி.எஸ்.சரோஜா பாடுவார்.

நீலாவுக்கு நெறஞ்ச மன்சு குணசுந்தரி, நீலமலைத் திருடன், புதையல், அவன் அமரன், தலை கொடுத்தான் தம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பேபி உமாவின் துடுக்குத்தனமான பேச்சு. பெரிய பெண் போன்ற முகத்தோற்றம் இவற்றில் ரசிகர்கள் மயங்கி இருந்தார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் சினிமாவை விட்டே விலகி விட்டார். அதற்கான காரணம் தெரியவில்லை. 15 வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும், கணவர் வீட்டில் நடிக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறுவார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்?தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 ... பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap