Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...!

12 மார், 2026 - 04:58 IST
எழுத்தின் அளவு:
Crime-thriller-films-mixed-with-comedy-This-weeks-OTT-arrivals...!
Advertisement

வாரத்தின் முதல் நாள் பரபரப்பாக தொடங்கி இறுதி நாளை அமைதியாக கழிக்க ஓடிடியில் பல்வேறு புதிய படங்கள் ரிலீசாகிறது. அந்த வகையில் இந்த வார புதுவரவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பெண்ணு கேஸ்
மலையாள இயக்குநர் பேபின் சித்தார்த் இயக்கத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த காமெடி க்ரைம் திரைப்படம் 'பெண்ணு கேஸ்'. இந்த படம் நேற்று (மார்ச் 11ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

லாக் டவுன்

இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில், அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'லாக்டவுன்'. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் நேற்று (மார்ச் 11ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி ரிலீசாகியுள்ளது.

மேட் இன் கொரியா
மலையான இயக்குநர் ஆர்.ஏ. கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ' மேட் இன் கொரியா'. இந்த திரைப்படம் இன்று (மார்ச் 12ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நவாப்ஸ் காபே

தெலுங்கு இயக்குநர் பிரமோத் ஹர்ஷா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'Nawab's cafe'. இந்த படம் இன்று (மார்ச் 12ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி ரிலீசாகியுள்ளது.

பூக்கி

இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பூக்கி'. இந்த திரைப்படத்தில் அஜய் திஷான் நயாகனாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கருப்பு பல்சர்
இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த 'கருப்பு பல்சர்'. இந்த படம் நாளை (மார்ச் 13ம் தேதி) டெண்ட் கொட்டா ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

யோகிடா

இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை சாய் தன்ஷிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'யோகிடா'. இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

ப்ரைடே
புதுமுக இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் தீனா, ராமசந்திரன் துரை ராஜ், மைமி கோபி, நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ப்ரைடே'. இந்த திரைப்படம் நாளை(மார்ச் 13ம் தேதி) சன்நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

லோக்கல் டைம்ஸ்
நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில் ரிஷிகாந்த், அப்துல் லீ, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் ' லோக்கல் டைம்ஸ்'. இந்த திரைப்படம் நாளை (மார்ச் 13ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

பர்த்தா மஹாசாயுலகு விக்ஞப்தி
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பர்த்தா மஹாசாயுலகு விக்ஞப்தி'. இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஜீ5 ஓடிடியில் நாளை ( மார்ச் தேதி) ரிலீசாகவுள்ளது.

ரிசார்ட்
எருமை சாணி விஜய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் ' ரிசார்ட்'. இந்த வெப் தொடர் நாளை(மார்ச் 13ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் :  சிவகார்த்திகேயன்என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் ... பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap