ஸ்ரீ ஸ்ரீ ரிலீஸ் எப்போது | மீனவனாக நடித்தது பாக்கியம் : சூரி நெகிழ்ச்சி | சர்தார் 2, மண்டாடி படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | ‛ஜனவரி 12 விடுதலை' படம் : ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட பதிவு | சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினி இரங்கல் | சாலமன் பாப்பையா காலமானார் | மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா? | நிஜ களரி வீராங்கணையாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர் | பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் 2027ம் ஆண்டு, ஜுன் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் மே 20ல் வெளியாகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஜுனியர் என்டிஆரின் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.
மலையாள நடிகரான டொவினோ தாமஸ், இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பது குறித்து அறிவித்திருந்தார். அதனால் படம் பற்றிய ஒரு சிறு குழப்பம் பரவியது. இந்நிலையில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு அந்தக் குழப்பத்தை திசை திருப்பியுள்ளார்கள்.
'கேஜிஎப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு 'சலார்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்தப் படத்தை முடித்த பிறகு 'சலார் 2' படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




