சோஹா அலிகானிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை - குணால் கெமு | நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா | பாகுபாடு பார்க்காமல் இசையமைக்கும் இளையராஜா | எம்.எஸ்.பாஸ்கர், அவர் மகன் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் ‛பீல் மை லவ்' | விக்ரமின் ‛பவர் ஹவுஸ்' : 100 சதவீதம் கியாரண்டியாம் | தி பாரடைஸ் : அனிருத்தின் சிறப்பான இசை | பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் | மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை | டேவிட் ரெட்டி படத்தில் கம்பீரமான தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் | ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி |

ஆரம்ப காலங்களில் ராஜ்கிரண் சினிமா விநியோகஸ்தராக இருந்தார். பின்னர் தயாரிப்பாளராகி சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வந்தார். அவருக்கு நடிக்கும் ஆசையும் இருந்தது. தான் நடிப்பதெற்கென்றே ஒரு கதையும் எழுதினார். அதைதானே தயாரித்து, நடிக்கவும் முடிவு செய்தார். ஆனால் அவரது நண்பர்கள் இந்த கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருக்க மாட்டீர்கள், முரட்டுத்தனமான உங்கள் தோற்றம் இதற்கு பொருந்தாது என்று கூறிவிட்டார்கள். இதனால் தான் நடிப்பதை ஒத்தி வைத்த ராஜ்கிரண். அந்த கதையில் ராமராஜனை நடிக்க வைத்து தயாரித்த படம்தான் 'என்னப் பெத்த ராசா'.
இந்த படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்க முடியாவிட்டாலும், கதையை முடித்து வைக்கும் ஜானி என்கிற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் ராமராஜன் ஜோடியாக ரூபினி நடித்திருந்தார், ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். சிராஜ் இயக்கி இருந்தார்.




