ஜென்டில்மேனுக்கு வயது 33 : முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? | ஜனநாயகன் : தமிழகத்தில் 100 கோடி, உலக அளவில் 250 கோடி வசூல் | சென்னை சிக்னலில் உருவான சிக்னல் அட் 11:30 | மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் பார்த்த பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ்! | 'பாட்வாரா 1947' டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அமீர்கான் பங்கேற்காதது ஏன்? | அல்லு அர்ஜூனின் 'புஷ்பா-2' சாதனையை முறியடித்தது 'ராமாயணா' | அல்லு அர்ஜூன் - அட்லியின் 'ராக்கா' குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைக்கப்போகும் கிளிம்ஸ்! | பான் இந்தியா படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் நயன்தாரா! | தேசிய விருது சர்ச்சை, குற்றச்சாட்டு : தேசிய விருது பெற்ற இமான் விளக்கம் | ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் புதிய வரவுகள்: இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |

பார்த்திபன், இயக்கி, நடித்த முதல் படம் 'புதிய பாதை'. புதிய பாதை கதையை எழுதிவிட்டு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது சுந்தரம் என்ற பத்திரிகையாளர்தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். 40 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டு 38 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க ரஜினியைத்தான் நினைத்திருந்தார் பார்த்திபன். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சத்திற்கு மேல் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு தானே நடித்தார். குஷ்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது வீட்டுக்கு சென்று கதை சொன்னார். கதை குஷ்புவிற்கு மிகவும் பிடித்து நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பிறகு படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். ஆனால் அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. அதோடு அவரது தோற்றமும் வடஇந்திய பெண்ணாக இருந்ததால் அவரை நிராகரித்தார்.
பிறகுதான் சீதாவை தேர்வு செய்தார். சீதாவை கண்டதுமே காதல் கொண்டார். இதனால் படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீத்தாராமன் என்று மாற்றினார். பின்னர் காதலித்து திருமணமும் செய்தார்.




