கோவையில் ராம் சரணுக்கு ஆபரேஷன் நிறைவு | தனுஷ் 56வது பட அப்டேட் தந்த தமிழரசன் பச்சமுத்து! | இவர் படம்னா இது இல்லாமலா? : தமிழ் சினிமாவிற்கு தனி அடையாளம் தந்த டைரக்டர்கள் | ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி கட்டு' ஆக.,21ல் ரிலீஸ் | சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் | ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு : பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு | சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம் | மும்பை பாந்த்ராவில் பூஜா ஹெக்டே கட்டிய பிரமாண்ட வீடு! | ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்! | கே.ஜி.எப் நாயகனுடன் இணைந்து நடிக்க ஆர்வத்தில் இருக்கும் ரன்பீர் கபூர்! |

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பழையகாவு ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 'உத்சவ்' விழா நடக்கும். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தானம் நிறுவியுள்ள 'தேவி ரத்னாக' விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும்.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவி மோகன் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு நடந்த விழாவில் தமிழ் நடிகர் ரவி மோகனுக்கு 'தேவிரத்னா' விருது வழங்கப்பட்டது. அவருக்கு ஒரு லட்சத்து ஒரு ரூபாய் ரொக்கமும், விருது பட்டையமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ரவி மோகனின் தோழியான கெனீஷாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவிற்கு கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.




