ஆஷா போஸ்லேவை போற்றும் ஏஆர் ரஹ்மானின் மியூசிக் வீடியோவில் ரஜினி, கமல் | ஹிந்தியில் வெற்றித்தடம் பதிப்பாரா பாலாஜி மோகன்? | மகாத்மா காந்தியாக நடிக்கும் 'அஞ்சான்' பட வில்லன் | ரிலீஸான சுவடே தெரியாமல் ஓடிடிக்கு வந்த நட்சத்திர குடும்ப வாரிசுகள் படம் | தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற ரிஸ்க் எடுப்பார்களா நாகார்ஜுனா அன்ட் சன்ஸ் ? | மீண்டும் வெற்றியை பதிவு செய்வாரா மமிதா பைஜூ? | மீண்டும் தனுஷை இயக்கும் வெங்கி அட்லூரி | பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா சூர்யா? | விஜய் சீட் கொடுக்க மறுத்த அந்த இயக்குனர் யார்? | 'ஜனநாயகன் முதல் பியார் பிரேமா கல்யாணம்' வரை: இந்த வார ஓடிடி பட்டியல் வெளியீடு...! |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்தில் அதிநவீன விஎப்எக்ஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டாலும் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனேவின் பெயரை மட்டுமே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், இந்த ராக்கா படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல்படி, இப்படத்தை 2027 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்தாலும் இறுதி கட்ட பணிகள் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கு மட்டும் 10 மாதங்கள் தேவைப்படும் என்கிறார்கள். மேலும் அல்லு அர்ஜுனுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்ட மாதமாக அமைந்து வருகிறது. காரணம், அவர் நடித்து வெளியான புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் டிசம்பர் மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. அதன் காரணமாகவே இந்த ராக்கா படத்தையும் 2027 டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.